About Us

Tamilnadu Vellalar Matrimony
Tamilnadu Vellalar Matrimony
Tamilnadu Vellalar Matrimony

அனைத்து வேளாளர் வெள்ளாளர் உறவுகளுக்கும் தாழ்மையான வணக்கம். வாழ்த்துக்கள்.

நமது கோவை மாவட்ட சோழிய வேளாளர் நல சங்கத்தின் சார்பில், திருமண தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

பல திருமணங்கள் நமது சங்கத்தின் மூலம் நடைபெற்று உள்ளது என்ற மகிழ்வான செய்தியையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கின்றோம்.

நமது திருமண தகவல் மையத்தின் மற்றுமொரு அங்கமாக, உலகெங்கிலும் வாழ்கின்ற நமது வேளாளர் வெள்ளாளர் உறவுகளில், திருமணத்திற்கு வரன் தேடுவோர், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, தங்களுக்கு பொருத்தமான வரனை தேர்தெடுக்கும் ஓர் அறிய வாய்ப்பாக, www.covaisozliyavellar matrimony. com, என்ற ஆன்லைன் மேட்ரிமோனி ஆரம்பிக்கப்பட்டு வெகு சிறப்பான சேவை வழங்கி வருகின்றது என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.

நமது உறவுகள் பயன்பெற வேண்டி, மிக மிக குறைந்த கட்டணத்தில், நிறைவான சேவை வழங்கும் நோக்கில் திருமண சேவை வழங்கும் covaisozliyavellar matrimony என்ற இத்தளத்தில், தங்களின் வரனை பதிவு செய்து, தங்களுக்கு பொருத்தமான வரனை தேர்வு செய்து, இனிதே இல்வாழ்க்கையில் இணைந்திட வேண்டுமாய் வாழ்த்துகின்றோம்.

covaisozliyavellar matrimony. Com என்ற இத்தளத்தில் ஜாதகம் பெற்றுக்கொண்ட பின்னர், இருவீட்டாரும் நேரடியாக கலந்து பேசி, விபரங்களை சரிபார்த்து திருமணத்தை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

திருமணம் நிச்சயம் ஆன உடன் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

மேலும், பதிவு கட்டணம் மற்றும் ஜாதக பிரதிகளுக்கான கட்டணங்கள் தவிர,எங்கள் யாருக்கும் வேறு எந்தவொரு மறைமுக கட்டணம், நன்கொடை, புரோக்கர் கமிஷணோ கண்டிப்பாக தர தேவை இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நீங்கள் தேர்தெடுக்கும் வரன் ஜாதகதாரருக்கு திருமணம் நிச்சயம் மற்றும் திருமணம் முடிந்து இருந்தால், அதற்கு பதிலாக உங்களுக்கு பொருத்தமான வேறு ஜாதகம் பெற்றுக் கொள்ளலாம்.

சேவை என்ற குறிகோளுடன் இயங்கும் எமது திருமண தகவல் மையம் மூலம் ஜாதகம் பரிவர்த்தனை செய்து,திருமணம் முடிவானால், கோவை மாவட்ட சோழிய வேளாளர் நல சங்கத்திற்கு நன்றி🙏💕 என்று திருமண அழைப்பிதழில் போடுமாறு வேண்டி கேட்டு கொள்கின்றோம்.

வாருங்கள் வரவேற்கிறோம்.
வாழ்த்துக்கள்🙏
நன்றி களுடன்... 🙏

கோவைரத்தனம்பிள்ளை